மாற்றத்திற்காக ஒன்றுபட வேண்டிய காலம் வந்துவிட்டது! யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர்

Report Print Sumi in சமூகம்

நாம் மாற்றத்திற்காக ஒன்றுபட வேண்டிய காலம் வந்துவிட்டது, இனியும் தனித்து இருப்போமால் எமது இனத்திற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாது என யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

எனவே சுய நலங்களை கைவிட்டுவிட்டு தமிழ் மக்களின் நலனுக்காக சிந்திப்பதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் நமக்காக ஒன்றாய் இணைவோம் காப்போம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பாதுகாவலர் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

குறித்த கருத்தரங்கில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மத குருமார், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.