யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய குடும்பஸ்தரொருவர் வைத்தியசாலையில்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - சம்பூர், பாட்டாளிபுரம் பகுதியில் குடும்பஸ்தரொருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியை சேர்ந்த மார்க்கண்டு மேவிநாதன் (வயது 40) என்பவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் குறித்த விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.