சிறுமியொருவரை கொடூரமாக தாக்கிய இரு பெண்கள் கைது! பொலிஸார் தீவிர விசாரணை

Report Print Kanmani in சமூகம்

நிக்கவெரட்டிய - கொட்டவெஹர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்களும் சிறுமியின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிக்கவரெட்டியவிற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் கொட்டவெஹர பொலிஸ் அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமி நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் சிறிய தாயும் அவரின் உறவினர் பெண் ஒருவருமே தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை இன்றைய தினம் நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.