மட்டக்களப்பு - தம்பலாவத்தை பகுதியில் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவனொருவன் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 1ஆம் திகதி பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்கமுற்ற நிலையில் குறித்த சிறுவன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - தம்பலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஹரிகரன் துசேன் எனும் 1 வயதும் 8 மாதங்களையும் உடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்பத்திலேயே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.