நாட்டை அழகுப்படுத்தும் ஜனாதிபதியின் வேலைதிட்டம் மாந்தை மேற்கில் ஆரம்பித்து வைப்பு

Report Print Ashik in சமூகம்

நாட்டை அழகுப்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பயணிகள் தரிப்பிடங்கள் தூய்மையாக்கப்பட்டு வர்ணம் பூசுதல் மற்றும் ஓவியம் வரையும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில், அடம்பன் பொலிஸாரின் அனுசரனையுடன் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாந்தை மேற்கு பிரதேச இளைஞர்கள் கலந்து கொண்டு வர்ணம் பூசுதல் மற்றும் படம் வரையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு உதவி பிரதேச செயலாளர், இளைஞர்கள், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 10 பயணிகள் தரிப்பிடங்கள் இவ்வாறு தூய்மையாக்கி வர்ணம் பூசப்பட்டு ஓவியம் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.