நாங்கள் இறப்பதற்கு முன் எங்கள் உறவுகள் எமக்கு வேண்டும்! வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

வவுனியா வீதி, அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1050 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே இன்று மதியம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் நாங்கள் இறப்பதற்கு முன் எமக்கு வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து சுழற்சி முறையில் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான செல்லப்பிள்ளை மகேந்திரனுக்கு நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், இப் போராட்டம் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.