2019ஆம் ஆண்டு திருமணமான பெண்களின் உலக அழகு ராணி போட்டியில் மகுடம் சூடிய கெரோலின் ஜூரி பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற திருமணமான பெண்களின் அழகு ராணி போட்டியில் கலந்துக்கொள்ள தயாரான போது, தான் எதிர்கொண்ட கஷ்டங்கள் தொடர்பாக கெரோலின் ஜூரி, இந்த சந்திப்பின் போது பிரதமரிடம் விளக்கியுள்ளார்.
இந்த சந்திப்பில் ஜூரியின் கணவர் நிஷாந்த தீபால், அவரது மகள் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.