பாடசாலை மாணவி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் கிராம சேவகர் உள்ளடங்கலாக மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குருணாகல், நிக்கவெரட்டிய பகுதியில் அண்மையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
குறித்த சிறுமியின் தந்தை மற்றும் இரண்டாவது மனைவியும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் 13 வயது சிறுமி ஒருவரை கிரிக்கட் துடுப்பினால் தாக்கிய குற்றச்சாட்டுக்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமி மீது முன்னர் பல தடவைகள் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கிராம சேவகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிரிக்கட் துடுப்பின் மூலம் குறித்த சிறுமி தாக்கப்படுகின்ற காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.