தமிழரசு கட்சியினரால் முல்லைத்தீவு நகரை சுத்தமாக்கும் பணி முன்னெடுப்பு!

Report Print Vanniyan in சமூகம்

இலங்கை தமிழரசு கட்சியினரால் முல்லைத்தீவு நகரை சுத்தப்படுத்தும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் 70வது ஆண்டு நிறைவு நிகழ்வையொட்டி குறித்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்சியின் ஆண்டு விழா நிகழ்வு இன்று மாலை நடைபெற்ற நிலையில் காலையிலிருந்து நிகழ்வு நடைபெறும் அந்த நேரம் வரையிலான இடைவெளியில் நகரை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளன.

இதன் போது முல்லைத்தீவு நகரப்பகுதியில் காணப்பட்ட நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் மற்றும் அதிகளவில் குப்பைகள் தேங்கிக்கிடந்த இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிரமதான பணிகளில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.