ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து துப்பாக்கி மற்றும் பெருந்தொகை தோட்டாக்கள் மீட்பு!

Report Print Murali Murali in சமூகம்

மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று இரவு கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அவரது மாதிவல இல்லத்தில் இருந்து 2016ம் ஆண்டிலிருந்து அனுமதிப்பதிரம் புதுப்பிக்காத கைத்துப்பாக்கி, 127 தோட்டாக்கள், இரண்டு கணினிகள், சந்தேகத்திற்கு இடமான சில ஆவணங்கள், இறுவெட்டுக்கள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவிடம் அதிகாரிகள் இன்று வாக்குமூலம் பெற்று நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.