முன்பள்ளிகளில் தேசிய கொள்கைகளை செயல்படுத்த அமைச்சரவை அனுமதி

Report Print Banu in சமூகம்

முன்பள்ளிகளில் தேசிய கொள்கையை செயல்படுத்த கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்பள்ளிகளுக்கான தேசிய கொள்கை வல்லுநர்கள், அதிகாரிகள் மற்றும் இந்த துறையில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் குறித்து வரைவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்தின் போது பரந்த அளவில் கலந்துரையாடல்கள் மற்றும் உரையாடலை உருவாக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல முன்வைத்த திட்டங்களின் தொகுப்பின் அடிப்படையில் முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய கொள்கை முன்வைக்கப்பட்டது.

இப் புதிய தேசிய கொள்கை நாட்டில் முன்பள்ளி கல்வியைப் பெறும் சுமார் 580,000 குழந்தைகளுக்கு நன்மைகளை வழங்கும்.

நாட்டில் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஏராளமான முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான கல்வி முறை பாடநெறி மூலம் வழங்கப்பட்டு அதற்கான செல்லுபடியாகும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

புதிய தேசிய கொள்கை முன்பள்ளியில் பொருத்தமான சூழலை உருவாக்கும், இது குழந்தைகளுக்கு சிறந்த முன்பள்ளி கல்வியை வழங்கும், என்று கூறியுள்ளார்.