பகிடிவதையில் ஈடுபட்டால் 8 வருடங்களுக்கு பரீட்சை எழுத தடை!

Report Print Vethu Vethu in சமூகம்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 8 வருடம் பரீட்சை எழுத தடை விதிக்கும் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் பல்வேறு புதிய நடைமுறைகள் மற்றும் சட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார்.

அதற்கமைய பாடசாலை அனுமதியின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

அதேவேளை பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 8 வருடங்களுக்கு பரீட்சை எழுத தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.