கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஐந்து கோடியே 80 ஆயிரம் ரூபா பெறுமதியான 6.5 கிலோகிராம் எடை கொண்ட 65 தங்க கட்டிகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொருட்களை ஏற்றி செல்லும் ஊழியராக பணிபுரியும் 41 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் தங்க கட்டிகளை தனது உடலில் மறைத்து எடுத்துச் செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சுங்க திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.