இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது தாக்குதல்!

Report Print Navoj in சமூகம்

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பகுதிக்கு சொந்தமான பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் வாகனேரி பகுதியில் இன்று இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பேருந்தின் முன் பக்க கண்ணாடிக்கு கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.