யாழ்ப்பாணத்தில் பேருந்து சாரதிகள் வேலைநிறுத்தம்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் உள்ள சாரதிகளினால் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பேருந்து நிலைய நேர அட்டவணையாளருக்கும் வெளிமாவட்டத்தினருக்கும் இடையில் இன்று முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அங்குவந்த பொலிஸார், நேர அட்டவணையாளரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து சாரதிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.