மன்னார் மாவட்டத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா

Report Print Ashik in சமூகம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மன்னார் மாவட்டத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார்.

அதனடிப்படையில் மன்னார், பேசாலை கிராமத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் கேட்போர் கூடத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது பேசாலை கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புக்கள், ஆலய பிரதிநிதிகள் மற்றும் பேசாலை பங்குத்தந்தை ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை பேசாலை கிராமத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவ அமைப்புக்களின் சகல பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பாக பேசாலை பகுதியில் யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட படகுகளுக்கான நஸ்ட ஈடுகள் எவையும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற கருத்தை மீனவ சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் முன் வைத்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துரைக்கையில், 'என்னை நம்பியவர்களை' குறிப்பாக 'என்னை நம்பி வந்த மக்களை நான் ஒரு போதும் கை விடுவதில்லை' என தெரிவித்துள்ளார்.

எனவே மக்களின் பிரச்சினைகளை தான் ஆராய்ந்து நிவர்த்தி செய்வதாகவும் கூறியுள்ளார்.