காணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தந்தை மரணம்

Report Print Vanniyan in சமூகம்

காணாமலாக்கப்பட்ட தனது மகனுக்கு நீதிகோரி தொடர் போராட்டங்களில் பங்கெடுத்து வந்த தந்தை ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மன்னார், ஓலைதொடுவாய் பகுதியை சேர்ந்த 73 வயதுடைய சூசைப்பிள்ளை இராசேந்திரம் என்பவரே நீண்டநாள் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரது மகன் இராசேந்திரம் அன்ரனி ரஞ்சன் 2008ஆம் ஆண்டு ஓலைதொடுவாய் பகுதியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் காணாமலாக்கப்பட்டிருந்தார்.

அன்று முதல் தனது மகனை தேடி மகனின் மனைவியான தனது மருமகளுடன் இணைந்து தொடர்ந்து நீதிகோரிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட இவரது மகனின் மனைவி ஜெயக்குமாரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளராக செயற்பட்டு வருகின்றார்.