இலங்கை கிரிக்கெட் அணியிடம் நட்டஈடு கோரியுள்ள ஹத்துருசிங்க

Report Print Ajith Ajith in சமூகம்

தமது பதவிக்காலம் முடிவடைய முன்னர் பதவியில் இருந்து விலக்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க நட்டஈடு கோரியுள்ளார்.

தமக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை 5 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை அவர் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில் உரிய காலத்துக்கு முன்னரே தம்மை விலக்கியமையால் தமது கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி தமது திறமையை காட்டவில்லை.

இந்தநிலையில் அதிகளவான சம்பளத்தை பெறும் ஹத்துருசிங்க தோல்வி கண்டுள்ளதாக அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.