மட்டக்களப்பில் நீராட சென்ற இளைஞர் சடலமாக மீட்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - கறுவேப்பங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உன்னிச்சைகுளத்தில் நீராட சென்ற நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை இளைஞர்களுடன் நீராட சென்றவர் ஆழமான பகுதியில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு, கறுப்பங்கேணி, அம்புறுஸ் வீதியை சேர்ந்த நிஷாந்தன் என்னும் 20 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.