2 அப்பத்திற்கு 700 ரூபா அறவிட்ட உணவகம்

Report Print Vethu Vethu in சமூகம்

அம்பேபுஸ்ஸ பகுதியில் உள்ள உணவகத்தில் 2 அப்பத்திற்கு 700 ரூபா அறவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காலை உணவிற்காக பேருந்து நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் 85 வயதான வயோதிப பெண் ஒருவர் சம்பலுடன் இரண்டு அப்பங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

அதற்காக 700 ரூபா என குறிப்பிடப்பட்ட பற்றுச்சீட்டை உணவக உரிமையாளர் வழங்கியுள்ளார்.

அதே உணவகத்தில் பாற்சோறு இரண்டு துண்டும் மீன் கறியும் பெற்று கொண்ட மற்றுமொரு பெண் ஒருவரிடமும் 700 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் புபே முறையிலேயே உணவு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூர பயணம் மேற்கொள்ளும் பேருந்துகள் உணவுக்காக நிறுத்தப்படும் உணவகங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.