கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற ரயிலில் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் மரணம்

Report Print Theesan in சமூகம்
863Shares

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம், வவுனியா தேக்கவத்தை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 35 வயதான ராஜன் உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

குறித்த மரணம் விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.