கனடா நாட்டைச் சேர்ந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் வைத்து இன்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீசா முடிவடைந்த நிலையில் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.