மன்னார், வங்காலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார், வங்காலை பகுதியில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வங்காலை அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக இன்று காலை இந்நினைவு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

1985ஆம் ஆண்டு தை மாதம் 6ஆம் திகதி தள்ளாடி பகுதியைச் சேர்ந்த இராணுவத்தினர் வங்காலை தூய அன்னாள் பங்கு பணி செயளாலராக சேவையாற்றிய அருட்பணி மேரி பஸ்டியன் அடிகளார், அவருடன் தங்கியிருந்த அப்பாவி சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 10 பேரை சுட்டு படுகொலை செய்திருந்தனர்.

இவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு தினமும், பொதுபிரார்த்தனையுமே இதன்போது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தவகையில் குறித்த பகுதியில் இரத்த தான முகாம் இடம்பெற்றுள்ளது.