தாக்குதல் மேற்கொண்ட உயர் அதிகாரியின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Report Print Kumar in சமூகம்

நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் தாக்குதல் மேற்கொண்ட உயர் அதிகாரியின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கல்லடி, உப்போடையில் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

முடக்காதே முடக்காதே பெண்களின் முன்னேற்றத்தினை முடக்காதே, பதவி நீக்கு பதவி நீக்கு பெண்ணை தாக்கிய ஆண் அதிகாரியை பதவி நீக்கு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் கடையாற்றும் பெண் உத்தியோகத்தரான தவப்பிரியா மீது தாக்குதல் நடத்திய அதிகாரியின் பதவியை நீக்கி அவர் மீதான விசாரணையை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் குறித்த அதிகாரி செயற்பட்டுள்ளதாகவும், இதற்கு கடுமையான நடவடிக்கையினை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.