மட்டக்களப்பில் மணல் கொள்ளை - விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Navoj in சமூகம்
47Shares

மட்டக்களப்பு, வெள்ளாமைச்சேனைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளையிடப்படுவதால் வயல் நிலங்கள் சேதமடைவதாக அப்பகுதிமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் பொலிஸாரின் உதவியுடன் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோர் இரவு பகல் என்று பாராமல் இந்நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.

இது தொடர்பில் மணல் ஏற்றும் உழவு இயந்திரத்தின் இலக்கங்களோடு வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் எந்தப்பலனும் கிடைப்பதில்லை என அப்பகுதிமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.