சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்

Report Print Suman Suman in சமூகம்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கோணாவில் கிழக்கு பகுதியில் இன்று காலை இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் வியாபாரம் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் சமூகத்தில் எழுந்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தே இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

இப்போராட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மு.சந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.