அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சீனியின் விலையானது அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாகவே இலங்கையிலும் சீனியின் விலை உயர்வடையும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலப்பகுதியில் ஆசிய மற்றும் ஐரோப்பிய வலயங்களில் கரும்பு உற்பத்தி குறைவடைவதே இவ்வாறு சீனியின் விலை அதிகரிக்க காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி இந்த மாத இறுதியில் சீனியின விலையானது இலங்கையில் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக சந்தையில் ஒரு டன் சீனியின் மொத்த விலையானது 400 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.