சட்டமா அதிபர் திணைக்கள அறிக்கையை காரணம் காட்டி கிடப்பில் போடப்பட்டுள்ள ஹரிஸ்ணவியின் வழக்கு

Report Print Theesan in சமூகம்

வவுனியா, உக்குளாங்குளத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பாலியல் வன்புனர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கெங்காதரன் ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் வவுனியா திறந்த நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

அந்தவகையில், இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சட்டமா அதிபரின் மருத்துவச்சான்று அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதையடுத்து வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிக்கை வரும் வரையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக நீதவான் இன்று மன்றில் அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பட்ட பின்னர் வழக்கு தவணை திகதியிடப்பட்டு உறவினருக்கு அறிவிப்பதாகவும், அதுவரையில் வழக்கு விசாரணைகளை கிடப்பில் போடுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பாக மன்றில் ஆஜராகிய மனித உரிமைகள் அபிவிருத்தி நிலையத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.