ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் பலி

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று இன்றிரவு ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக இருந்த மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் பணியாற்றுகின்ற 41 வயதுடைய மதுரசிங்க என்ற இராணுவ வீரர் இதன்போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.