வெளிநாடு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Ajith Ajith in சமூகம்
178Shares

நைஜீரியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு துறை அமைச்சு தெரிவித்துள்ளது

அபுஜாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர். நைஜீரிய அரசாங்கத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்டதாக கூறி இலங்கையர்கள் ஏழு பேர் உட்பட்ட 66 பேர் கைதுசெய்யப்பட்டதாக நைஜீரிய அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

இவர்களிடம் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் நைஜீரிய அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே இலங்கையர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.