இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 130 வெளிநாட்டவர்கள் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
111Shares

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 130 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 5ம் திகதி இரவு 10 மணி முதல் 6ம் திகதி காலை 6 மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அதிக காலம் இலங்கையில் தங்கியிருந்தமைக்கான உரிய ஆவணங்களைக் கொண்டிருக்காமையினாலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 பாகிஸ்தானியர்கள், 10 மாலைத்தீவு நாட்டவர்கள், 8 நைஜீரியர்கள், பங்களாதேஷை சேர்ந்த ஆறு பேர், 4 சீனர்கள், 4 கனேடியர்கள், 2 சுவிஸ் பிரஜைகள் ஒரு கட்டார் நாட்டவர் ஆகியோர் இதில் அடங்கியுள்ளனர்.