அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் உட்பட்ட மூவர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வெள்ளை வான் தொடர்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பு குறித்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று அவர்களுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கைதுசெய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.