நிசாந்த டி சில்வா நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விசாரணை!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் பொலிஸ் விசேடப்பிரிவு அதிகாரி நிசாந்த டி சில்வா சுவிட்ஸர்லாந்துக்கு சென்றமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொலிஸ் திணைக்களத்தில் அனுமதிப்பெறாமலேயே அவர் நாட்டில் இருந்து வெளியேறியதாக முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நிசாந்த டி சில்வா, தமது உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைத்தபோதும், அவருடைய வாகனங்களை கையளித்தபோதும், கைத்துப்பாக்கியை கையளித்தபோதும், திணைக்களத்தில் விடுமுறை பெற்றபோது ஏன் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

எனவே அவர் நாட்டை விட்டு வெளியேறியமைக்கு பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகப்பிரிவு, போக்குவரத்துப்பிரிவு என்பனவே பொறுப்புக்கூறவேண்டும என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.