இலங்கை பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்த பிரித்தானிய பெண்

Report Print Vethu Vethu in சமூகம்
1298Shares

காலி மாவட்டத்தில் பெண் உப பொலிஸ் பரிசோதகரின் கையைக் கடித்த குற்றச்சாட்டில் பிரித்தானிய நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹப்பாவன பிரதேசத்தில் தற்காலிகமாக விடுதி ஒன்றில் குறித்த பிரித்தானியப் பெண் தனது கணவனுடன் தங்கியிருந்த போது பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் போது குறித்த பெண்ணிடமும் அவரது கணவனிடமும் கடவுச்சீட்டு கோரப்பட்டது.

இந்நிலையில் பிரித்தானிய பெண், பொலிஸ் பரிசோதகரின் கையை கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரஜைகளான இவர்கள் கடந்த 10 வருடங்களாக இலங்கைக்கு வந்து செல்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த இருவரினதும் விசா கடந்த மாதம் 6ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

சந்தேக நபரான பெண்ணுடன் அவரது கணவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கராப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பிரித்தானிய பெண் கடித்தமையினால் காயங்களுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.