சரண குணவர்தனவுக்கு மூன்றாண்டு கடூழிய சிறை

Report Print Steephen Steephen in சமூகம்

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய காலத்தில் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த தீர்ப்பை வழங்கியதுடன் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி முதல் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலத்தில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய போது 96 லட்சம் ரூபாயை செலவிட்டு மூன்று வாகனங்களை குத்தகைக்கு பெற்றுக்கொண்டமையினால் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஆணைக்குழு, சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்பை அறிவித்த கொழும்பு பிரதான நீதவான், குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு எந்த சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனடிப்டையில் குற்றவாளிக்கு இந்த சிறைத் தண்டனையை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.