வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 6 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலை பசுமையாக்கல் திட்டமும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா - சூடுவெந்தபுலவு, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் இன்று பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தேசிய ரீதியில் தரம் 6 மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளிலும் தரம் 6 மாணவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் அயல் பாடசாலைகளில் கல்வி கற்ற 62 மாணவர்கள் அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி நடவடிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களுக்கு சின்னம் அணிவிக்கப்பட்டு, வாத்திய அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.