மீண்டும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் அவன்கார்ட் நிறுவனம்

Report Print Steephen Steephen in சமூகம்

அவன்கார்ட் மெரிடைம் நிறுவனம் தனது நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி விடுதலையான பின்னர், நடவடிக்கைகளை ஆரம்பிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

காலி துறைமுகத்தில் இயங்கி வந்த மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை நடத்திச் செல்ல முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய அவன்கார்ட் நிறுவனம் தனது நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதம் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனம் இதற்கு முன்னர் வைத்திருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவன்கார்ட் நிறுவனம் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான நிபுணத்துவம் கொண்ட நிறுவனம் எனவும் அந்த நிறுவனம் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்க கூடிய நிறுவனம் என்பதுடன் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கக் கூடியது என ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.