சடலங்களை புதைப்பதற்கு மயானம் இன்றி தவிக்கும் லபுக்கலை தோட்ட மக்கள்

Report Print Thiru in சமூகம்
51Shares

நுவரெலியா - கொத்மலை, லபுக்கலை தோட்டம் கொண்ட கலை பிரிவில் இறந்த சடலங்களை புதைப்பதற்கான இடம் இல்லாமையால் அப்பகுதி மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தோட்டப்பகுதியில் உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான இடங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் சடலங்கள் வீதியோரங்களில் புதைக்கப்பட்டு வருகின்றன.

கொண்டகலை தோட்ட பிரிவிற்குரிய மயானம் கண்டி - நுவரெலியா வீதி புனர் நிர்மாண பணிகளின் வீதியுடன் இணைத்து அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த மயானத்தில் இருந்த பெரும்பாலான கல்லறைகளும், புதை குழிகளும் மண் போட்டு மூடப்பட்டுள்ளன.

இதனால் குறித்த தோட்டப் பகுதிக்கு மயானம் அமைப்பதற்கான பொருத்தமான இடத்தினை பெற்றுக் கொள்வதற்கு தோட்ட மக்களும் அரசியல் பிரமுகர்களும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதும் இதுவரை அவை பலனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.