அம்பாறையில் இராணுவ வீரர் ஒருவர் சடலமாக மீட்பு

Report Print Varunan in சமூகம்
84Shares

அம்பாறையில் இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அன்னமலை - 2 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வேப்பையடி இராணுவ முகாமிலிருந்து குறித்த இராணுவ வீரரின் சடலம் இன்று அதிகாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

அநுராதபுர மாவட்ட சிறிபுர பகுதியை சேர்ந்த யு.ஏ.சுஜீத் பாலசூரிய என்ற 37 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நள்ளிரவு தனக்கு நெஞ்சு வலிப்பதாக சக இராணுவ வீரரிடம் கூறிய பின்னர் திடீரென மயக்கமடைந்து நிலத்தில் விழுந்துள்ளார்.

பின்னர் இராணுவ வீரர்கள் உடனடியாக குறித்த வீரரை மீட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவர் இறந்த நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.