மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவருக்கு விளக்கமறியல்

Report Print Steephen Steephen in சமூகம்
1893Shares

புதிய இணைப்பு

நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மருத்துவரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை நீதிமன்ற நீதிவான் அசாங்கா கிட்டியாவத்த முன்னிலையில் இன்று மருத்துவரை ஆஜர்படுத்தியபோதே எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

முதலாம் இணைப்பு

பாடசாலை மாணவிகள் நான்கு பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அம்பாறை - உகண, கோனகொல்ல சேனரத்புர கிராமிய வைத்தியசாலையின் மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உகண பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் இன்று நடைபெறவுள்ள ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ்களை பெற வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது குறித்த மருத்துவர், மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளின் முறைப்பாடும் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. 14, 17 மற்றும் 18 வயதான மாணவிகளே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

மேலதிக தகவல் மற்றும் படங்கள் - வருணன்