காய்கறி விலைகள் மேலும் உயர்வு

Report Print Steephen Steephen in சமூகம்
136Shares

சிறப்பு அங்காடிகள் மற்றும் சந்தைகளில் காய்கறிகளின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பலாக்காய் மற்றும் மஞ்சள் பூசணிக்காய் ஆகியவற்றை கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளதாக வர்த்தகர்களும், நுகர்வோரும் தெரிவித்துள்ளனர்.

தினமும் காய்கறிகளை கொள்வனவு செய்ய ஜா-எல நகருக்கு வரும் மக்கள் கடைகளில் காய்கறி விலைகள் அதிகரித்துள்ளதால், நகரில் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வரும் பலாக்காய் மற்றும் மஞ்சள் பூசணிக்காயை கொள்வனவு செய்கின்றனர்.

ஒரு கிலோ பாவற்காய் 420 ரூபாய், கறி மிளகாய் 490 ரூபாய், பீட் கிழங்கு 420, வெங்காய தாள் 490, முள்ளங்கி கிழக்கு 220, வெண்டிக்காய் 240, பட்டுக்காய் 230, போஞ்சி 490, கறி வாழை 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

எனினும் ஒரு கிலோ மஞ்சள் பூசணிக்காய் 60 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு பொதி பலாக்காய் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.