மன்னார் மாவட்டத்தின் 2020ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தின் 2020ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி தொடர்பான வரவு செலவு திட்டங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அனுமதிகள் பெற்றுக்கொள்வது தொடர்பான முன்னோடி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸின் நெறிப்படுத்தலில் இக்கலந்துடையாடல் இடம்பெற்றுள்ளது.

பல திட்டங்கள் குறித்த அவசியத் தேவைகளை கருதித் திட்டங்கள் விரைவுப்படுத்தல் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் இதன்போது ஆராயப்பட்டது.

இதனைதொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் முசலி பகுதியில் கடந்த பல வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் பாதிப்பை எதிர்கொண்ட மக்களுடனான சந்திப்பு காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது முசலி பிரதேச பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வீட்டு திட்டங்கள் அமைக்கப்பட்டும் அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் வீட்டுத்திட்டம் இன்றி புறக்கணிக்கப்பட்டு உள்ள நிலையில் குறித்த காணி விடயங்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுவது சுட்டிக்காட்டப்பட்டு அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக காணி ஆணையாளர் முன்னிலையில் குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவிக்கையில்,

அரசியல் இலாபம் கருதி குறித்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுபறி நிலையில் இதை காட்டியே வாக்கு பெறுவதற்கான நடவடிக்கையாகவே கையாளப்பட்டு வந்த பிரச்சினை.

தற்போது பிரச்சினை என்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கான தீர்வை வரும் தொடர்ச்சியான கூட்டங்கள் இடம்பெறும் எனவும் தீர்வு பெறப்படும் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.