50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது

Report Print Steephen Steephen in சமூகம்

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் கணவன், மனைவி உட்பட மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றவிசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் களுத்துறை வடக்கு நாகஸ் சந்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்கு அமைய சந்தேகநபர்களுக்கு இந்த போதைப்பொருள் கிடைத்துள்ளது என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இந்த ஹெரோயின் போதைப்பொருளை நாகஸ் ஹந்தி, கந்தபாழ பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் எடுத்துச் செல்வதாக தெரியவந்ததையடுத்து பல தினங்கள் காத்திருந்து சந்கேநபர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

தொகையாக கிடைக்கும் ஹெரோயின் போதைப்பொருளை இவர்கள், ஒரு கிராம் முதல் 100 கிராம் என பல எடைகளில் பொதி செய்து, கேட்கும் எடைகளின் அடிப்படையில் களுத்துறை மற்றும் தென் மாகாணத்தில் பல இடங்களுக்கு விநியோகித்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூன்றாவது நபர், கைது செய்யப்பட்டுள்ள கணவன், மனைவியின் சகோதரர் எனவும் 18 வயது பூர்த்தியாகாத இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.