சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள போலி பாதிரியார்!

Report Print Gokulan Gokulan in சமூகம்

கடந்த மாதம் அம்பிட்டியே சுமனரத்ன தேரரின் அடாவடித்தனங்கள் அடங்கிய பல வீடியோக்கள் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

ஒரு கத்தோலிக்க பாதிரியார் மீது அந்த பௌத்த பிக்கு இனவாதத்தை கக்கும் விதமான காட்சிகளை உள்ளடக்கி சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்த அந்த வீடியோக்கள் தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருந்தன.

அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இனவாத கருத்துக்களுக்கும், மதவாத அடாவடித்தனங்களுக்கும், சட்ட மீறல்களுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றவர்.தமிழ் மக்களுக்கு எதிராக காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது அடாவடித்தனங்கள் கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், குறிப்பிட்ட அந்த வீடியோக்களில் காணப்படுகின்ற பாதிரியார் தொடர்பாக வெடித்துள்ள சர்ச்சைதான் தற்பொழுது பொதுப்பரப்பில் அதிகம் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

வீடியோக்களிள் காணப்படுகின்ற அந்த பாதிரியாரை 'கத்தோலிக்க பாதர்' (அருட் தந்தை) என்றுதான் அந்த தேர் அழைக்கின்றார்.

அந்த பாதிரியாரும் கத்தோலிக்க அருட் தந்தைகள் அணியும் நீண்ட வெண்நிற அங்கி மற்றும் கறுப்பு நிற இடுப்பு பட்டி அணிந்தே காணப்படுகின்றார்.

இத்தனைக்கும் அவர் ஒரு கத்தோலிக்க அருட்தந்தையே அல்ல என்பது மட்டுமல்ல அவர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரே கிடையாது என்று கூறுகின்றது இலங்கை கத்தோலிக்க திருச்சபை.

இந்த நபர் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடக இணைப்பாளர் அருட் தந்தை ஜுட் கிரிஷாந்த, இவர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் அல்லவென்றும், இவர் திருமணமானவர் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமண பந்தத்தில் தங்களை இணைத்துக்கொள்ளாத, கிறிஸ்தவ ஊழியத்திற்கு என்று தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் மாத்திரமே இதுபோன்ற நீண்ட வெள்ளை அங்கியும்(Cassock), கறுப்பு நிற இடுப்புப் பட்டியும் அணிவதற்கு கத்தோலிக்க திருச்சபை அனுமதி வழங்கியுள்ளதாகத் தேரிவித்துள்ள அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த , கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்கள் மதம் மாற்றும் காரியங்களில் ஈடுபடுவது கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

(அருட்தந்தை ஜுட் கிரிஷாந்தவின் முழுமையான அறிக்கையை, இணைக்கப்பட்டுள்ளகாணொளியின் இறுதிப் பகுதியில் காணலாம்)

காணொளிகளில் பாதிரியார் அணியும் ஆடையில் காணப்படும் நபரின் பெயர் நாளக்க பொன்சேகா. சில வருடங்களுக்கு முன்பு இலங்கை மெதடிஸ்த திருச்சபையில் ஒரு சுவிசேசகராக கடமையாற்றிய இவர், ஒழுக்கமீறல்கள் காரணமாக மெதடிஸ்த திருச்சபையில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். தற்பொழுது சுயாதீனமாக கிறிஸ்தவ ஊழியங்கள் செய்து வருகிறார்.

நாளக்க பொன்சேகா ஒரு போதகராக கடமையாற்றுவதற்கான அனுமதியை தாம் வழங்கவில்லை என்று கூறுகின்றார் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் பிஷப் ( President Bishop) Rev. அசிரி பெரேரா.

வீடியோவில் காணப்படும் நாளக்க பொன்சேகா என்ற நபரின் உடல் மொழியையும், சட்ட மீறலையும், இறுமாப்பு தோரணையையும், அவரது செயலையும் வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை மெதடிஸ்த திருச்சபை, 'கிறிஸ்தவத்தை பிரதிபலிக்காத நடவடிக்கை' என்று சாடி காரசாரமான ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. (அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)

A Statement from the President Bishop of the MethodistChurch Sri Lanka on Religious harmony.

Dear Peace Loving People of Sri Lanka,

I can see the following video going viral all over andcausing embarrasment to both Buddhism and Christianity, two religions that havecoexisted in Sri Lanka even in the 6th century A.D.in Anuradhapura.

Though this monk's particular behaviour in this video and afew other videos which are circulating do not in any way reflect the nobleteachings of the Lord Buddha, I leave it for the Ven. Maha Nayaka's and MahaSangha councils to do the needful to put the house in order.

As the President Bishop of the Methodist Church Sri Lanka iappeal to all Christians and all other Peace loving Citizens to kindly respond and not react to thesevideos that are going viral which can cause religious tension and disharmony inour mother land, which is the last thing we want to see happening.

One issue that the Christian Church in Sri Lanka has to makeclear is the identity of this purticular person in Cassock shown in the video.

As a responsibleChristian leader i place before you the following so that we make thingsclearer for all to understand this issue in the correct perspective. I am sad to see that those who should speakon behalf of this person are keeping quiete and it is causing more problems forall of us.

1. The person wearing a Cassock is one Nalaka Fonseka. Someyears back he served as an Evangelistic Worker of the Methodist Church SriLanka but had to resign as he did not fall in line with the discipline of ourChurch. During the time he served my church he was never ordained as a priest.

2. According to the information i have, this person inCassock, since leaving the Methodist Church Sri Lanka seems to have operated onhis own as a free lance evangelist without being accountable to any Church bodyfor his ministry work.

3. In the practice of the Christian Church it is veryimportant that those who are serving God should be under the discipline of aChurch body that governs and overseas the ministry work carried out by itsclergy and evangelists. When issues come up for church workers both clergy andevangelists, such governing bodies or the respective leaders are called upon tointervene to do the needful to settle the issue. But very sadly up to now nosuch body has come forward publicly to own this person in Cassock and do theneedful to settle the issue.

Is he actually not under any ones supervision? Or is the socalled body that should own him keeping quiet to avoid embarrasment and facethe consequences? If this is the actual position with his supervisors, icategorically condemn their silence because it has put the whole nation'sInterreligious harmony at stake.

4. We all need to understand that the attitude with which wedo our religious work, no matter what religion we belong to, is of supremeimportance. While i condemn the attitude of the purticular monk, i also condemnthe attitude of this person in Cassock. His body language and facialexpressions do not reflect a spirit of humility. He should have got down fromhis bike when speaking to the monk. He is not wearing a helmet when he ridesthe Motor Bike as if he is not under the law of the country. Christian workersare called upon in the Scriptures to be law abiding citizens. The principlethat Jesus followed was "Render unto Ceaser what belongs to Ceasar whilerendering unto God what belongs to God."

Finally i say that the religious liberty of this countryenshrined in the Constitution should be upheld by the state for all itscitizens in Sri Lanka equally. In many instances, in recent times, the Policeinaction has escalated to alarming heights. The Methodist Church like severalother Christian Churches has experienced and suffered with certaindiscrimination carried out by certain law enforcing authorities, about which we have lamented but not heardmuch. I am also displeased with religious dignitaries of one religion takingthe law in to their hands to do policing over another legitimate religion thathas the right to function, practice and publicly proclaim its own faith in thisland.

I trust that this Statement of mine catches the eye of H.E.the President and the Honourable Prime minister who handles the subject ofReligious Affairs in Sri Lanka.

Let there be Peace and religious harmony in Sri Lanka.

Rev. Asiri P. Perera

President Bishop

Methodist Church Sri Lanka