மன்னாரில் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைப்பு

Report Print Ashik in சமூகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் கீழ் இளைஞர், யுவதிகளை நவீன யுகத்திற்குள் உள்ளீர்கும் முகமாக ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று காலை அதன் மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.மஜித் தலைமையில் இந் நிகழ்ச்சித் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தொழில் வாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக குறித்த நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் இணையத்தளத்தின் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு எதிர்கால செயற்திட்டங்களில் இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோக ராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதி நிதிகளான ஜசோதரன் மற்றும் ஜோசப் நயன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.