எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் ஊழியர்களின் செயற்பாட்டால் பயணிகள் அவதி

Report Print Theesan in சமூகம்

வவுனியா - செட்டிகுளம் எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டுனர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் பல தடவைகள் இடம்பெற்று வருவதாகவும், நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அசமந்த போக்கே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு முறையிட்ட போதும் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இன்று வரையிலும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் தொடர்ச்சியாக பெற்றோல் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் பணி புரியும் ஊழியர்களின் அசமந்த போக்கினால் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், இதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடியாக தீர்வினை பெற்றுத் தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.