வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மெனிக்பாம் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு முன்பாக இளைஞர் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டமை தொடர்பாக பறயனாலங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச் சம்பவத்தில் மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த பா.நிரோஜன் வயது 35 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதுடன் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபரின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்தநபரை அவ்வீதியால் பயணித்த வாகனங்கள் மோதிவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.