கஞ்சிபான இம்ரான், பொட்ட நவ்பரின் சிறையறைகளில் கைப்பற்றப்பட்டுள்ளப் பொருட்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரான் மற்றும் பொட்ட நவ்பர் ஆகியோரின் சிறையறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு செல்போன்கள் மற்றும் நான்கு சிம் அட்டைகளை இன்று கைப்பற்றியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் இன்று முற்பகல் மேற்கொண்ட திடீர் தேடுதலில் கஞ்சிபான இம்ரான் சிறையறையில் தனது துணியில் சுற்றி வைத்திருந்த செல்போனும், இரண்டு சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொட்ட நவ்பரின் சிறையறையில் இருந்து செல்போனும் மேலும் இரண்டு சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கஞ்சிபான இம்ரான் வழக்கு விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்ததுடன் அந்த நேரத்தில் அவரது சிறையறை கடுமையாக சோதனையிடப்பட்டுள்ளது என சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.