கிளிநொச்சியில் இன நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுப்பு

Report Print Suman Suman in சமூகம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்க செயற்பாடுகள் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமானது.

தெற்கையும், வடக்கையும் இணைத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் குறித்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களை சேர்ந்த 24 அங்கத்தவர்கள் பூநகரிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இங்குள்ள மக்களின் அடிப்படை மற்றும் சமூக அரசியல் ரீதியான பிரச்சினைகளை சகோதர இனத்தவர்களிற்கு அறிய வைக்கும் வகையிலும், அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை இங்கு உள்ள மக்கள் அறிந்து கொண்டு தமக்குள்ளே புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கிளிநொச்சி பூநகரிக்கு வருகை தந்த காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களை பூநகரி மக்கள் வரவேற்றனர்.

குறித்த நிகழ்வு பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச மண்டபத்தில் இடம்பெற்றது. அதன்போது வருகை தந்த மக்கள் கைலாகு கொடுத்த வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து இரு தரப்பினரும் தத்தமது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றது. இரண்டு நாட்களை கொண்ட குறித்த நல்லிணக்க திட்டம் நாளை நிறைவடைய உள்ளது.

வருகை தந்த சகோதர இனத்தவவர்களை பூநகரி மக்கள் இன்று இரவு தத்தமது வீடுகளில் தங்க வைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.