பிரான்சில் இருந்து பல வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வந்த முதியவர் மரணம்!

Report Print Kanmani in சமூகம்
1273Shares

பிரான்சிலிருந்து யாழிற்கு வருகை தந்த முதியவரொருவர் இடுப்பு வலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் கடந்த மாதம் பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டினை பார்ப்பதற்கு வந்திருந்த நிலையில், கடந்த 2ம் திகதி இடுப்பு வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது யாழ்ப்பாணம் - அத்தியடி பகுதியைச் சேர்ந்த கந்தையா பாலே ஈஸ்வரன் என்ற 70 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் இறப்பு விசாரணையினை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.